logo
புதிய தொழில் பயிற்றுநர்கள் மூலம் தகுதியுடைய இளைஞர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி: ஆட்சியர் தகவல்

புதிய தொழில் பயிற்றுநர்கள் மூலம் தகுதியுடைய இளைஞர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி: ஆட்சியர் தகவல்

19/Dec/2020 05:41:36

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்ட திறன் மேம்பாட்டுக்கழகம் மூலம் புதிய தொழில் பயிற்றுநர்கள் மூலம் தகுதியுடைய இளைஞர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி. 

 புதுக்கோட்டையில் நடைபெற்ற  மாவட்ட திறன் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி மேலும் பேசியதாவது:

 புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் பி.எம்.கே.வி.ஒய் 3.0 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி நிறுவனங்களில் இருசக்கர வாகனம் பழுது நீக்குதல், சி.ஒ-2 வெல்டிங், டிக் வெல்டிங், வயரிங், ஏ.சி மெக்கானிக், கணினி பயிற்சி, அழகுகலை பயிற்சி, உணவு பதப்படுத்துதல் போன்ற பல்வேறு குறுகியகால திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.  

மேலும் புதிய தொழில் பயிற்றுநர்கள் மூலம் தகுதியுடைய இளைஞர்களை பயிற்சியில் சேர்த்து சிறந்த முறையில் பயிற்சி அளிக்கவும், திறன் பயிற்சி மையங்களை கண்காணிக்கவும், பயிற்சி மையங்களில் நடத்தப்படும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை பயிற்சி திட்டங்களை மதிப்பீடு செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்..

இக்கூட்டத்தில் திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் குமரேசன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் திரிபுரசுந்தரி உள்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Top