logo
ஈரோட்டில் குக்கரில் புதிய முறையில் ஆவி பிடிக்கும் துப்புரவு பணியாளர்கள்

ஈரோட்டில் குக்கரில் புதிய முறையில் ஆவி பிடிக்கும் துப்புரவு பணியாளர்கள்

28/May/2021 10:26:55

ஈரோடு, மே: ஈரோட்டில் குக்கரில் புதிய முறையில் துப்புரவு பணியாளர்கள்   ஆவி பிடித்து வருகின்றனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மாநகர் பகுதியில் தோற்று பரவி வருவதால் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனதுப்புரவு பணியாளர்கள் மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் தினமும் கிருமி நாசினி தெளித்து பிளீச்சிங் பவுடர் போடுவது உட்பட கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தில் மூன்றாம் மண்டலத்துக்கு உட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு புதிய முறையில் ஆவி பிடிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதாவது ஸ்டவ் அடுப்பு மேல் குக்கர் வைத்து அதன் மேல் பகுதியில் 5 அடி நீளத்திற்கு குழாய் அமைத்து முன் பகுதியில் குனல் வழியாக ஆவி பிடிக்கின்றனர். குக்கரில் வேப்ப தலை, நொச்சி இலை, மூலிகைத் தைலம் போன்றவற்றை போட்டு அடுப்பில் வேக வைத்து அதன் மூலம் நீராவி பிடிக்கின்றனர்.

இன்று 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் இவர் புதிய முறையில் நீராவி பிடித்து சென்றனர். இந்த பணிகளை துப்புரவு ஆய்வாளர் இஸ்மாயில் பார்வையிட்டார்.

Top