logo
புதுக்கோட்டையில் நகர்மன்ற வளாகத்தில்   சித்த மருத்துவ பிரிவு சார்பில் கோவிட் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டையில் நகர்மன்ற வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவு சார்பில் கோவிட் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

04/Aug/2021 04:11:07

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் கோவிட் தடுப்பு விழிப்புணர்வு முகாம், மூலிகை கண்காட்சி, மற்றும் சித்த மருத்துவ முகாமினை ச ட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா முன்னிலையில்   மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று (4.08.2021)  தொடங்கி வைத்து  பார்வையிட்டார்.

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா  விழிப்புணர்வு வாரம் 1.8.2021 முதல் 7.8.2021 வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 


நான்காவது நாளான  இன்று புதுக்கோட்டை நகா;மன்ற வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கோவிட்-19 நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமில் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய  கபசூர  குடிநீர்,  மூலிகை குடிநீர் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சித்த மருத்துவ பரிசோதனை முகாம், மூலிகை செடிகள் கொண்ட கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

புதுக்கோட்டை நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் நோய் எதிர்ப்பு சக்தியை பொதுமக்களிடையே அதிகரிக்க கபசூர  குடிநீர், மூலிகை குடிநீர் ஆகியவை 10 ஆட்டோக்களின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியா; கவிதா ராமு,  சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா ஆகியோர்  தொடக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் .உம்மல் கதீஜா, பொது சுகாதார துணை இயக்குநர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, நகராட்சி ஆணையர் நாகராஜன், வட்டாட்சியர் செந்தில்குமார், க.நைனாமுகமது, எம்.எம்.பாலு  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Top