01/Dec/2020 07:27:52
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை திங்கள்கிழமை இரவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து, கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பிலாவிடுதி நொடியப்பச்சி கோயில் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.