logo
தேசிய நெடுஞ்சாலைகளில் 12 இடங்களில் சிறப்பு அம்சங்களுடன்  விபத்து சிகிச்சை மையம் திறப்பு.

தேசிய நெடுஞ்சாலைகளில் 12 இடங்களில் சிறப்பு அம்சங்களுடன் விபத்து சிகிச்சை மையம் திறப்பு.

04/Oct/2020 06:22:29

புதுக்கோட்டை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து சிறப்பு சிகிச்சை மையம் 12 இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டு ஏழு இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிக அளவு நடக்கிறது.விபத்துகளில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வது  தாமதப்படுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. உயிரிழப்புகளை தடுப்பதற்காக சாலைகளில் விபத்துக் காய சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படும் என்று மறைந்த முன்னாள் தமிழக  முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது

 அதன்படி தற்போது வேலூர் உள்ளிட்ட 6 இடங்களில் இந்த மையங்கள் செயல்பட்டு வருகிறது. 7-ஆவது மையமாக புதுக்கோட்டை மாவட்டம், கொடும்பாளூரில் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இந்த  விபத்து காயங்களுக்கான 24 மணி நேர சிகிச்சை மையத்தை நேற்று  சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.மேலும். 108 ஆம்புலன்ஸ் பணிபுரியும்  ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது இதில் 250 நபர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பணி நியமன ஆணையையும் வழங்கினார்.

இதன் பின்னர் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவதுஇந்தியாவிலேயே முன்னோடி மற்றும்  முன்மாதிரி திட்டமாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டங்களில் ஒன்றான  தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படும் போது உயிர் இழப்புகளை தடுப்பதற்காக விபத்து காயங்களுக்கான சிகிச்சை மையம்  தொடங்கப்பட்டு தற்போது ஜெயலலிதாவின் கனவு நிறைவேற்றபட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் 6 இடங்களில் விபத்து காயங்களுக்கான சிகிச்சை மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . அதைத்தொடர்ந்து தற்போது புதுக்கோட்டை மாவட்டம், கொடும்பாளூரில் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 7-ஆவது  மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் 24 மணி நேரமும் 4 மருத்துவர்கள் மற்றும் பத்து செவிலியர்கள் பணியில் இருப்பார்கள்  இங்கு வென்டிலேட்டர் வசதியுடன் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த மையத்தில்  விஷ கடி பக்கவாதம் தீ விபத்து மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கும் சிறப்பாக முதலுதவி அளித்து உயிரை காப்பற்றும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பது சிறப்பு அம்சமாகும்.

 இதுவரை 6 மையங்கள் மூலமாக  56 ஆயிரத்து 520 அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தில் மதனூர் கிருஷ்ணகிரி சேலம் மற்றும் மதுரை கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில்  விபத்து காயங்களுக்கான சிகிச்சை மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் பல முன்னோடி திட்டங்களை தமிழகம்தான் செயல்படுத்தி வருகிறது.

 இது போன்று, விபத்து சிகிச்சை மையம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறதுஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விபத்துகளை ஜீரோ சதவிகித தாமதம் இல்லா சிகிச்சை அளிப்பதற்காக தாய் திட்டம் ரூ 220 கோடி  மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் டாக்டர் சிவிஜயபாஸ்கர் .

 

                                                                              

        

Top