logo
மே 3-ஆம் தேதி முதல் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:தமிழக அரசு அறிவிப்பு

மே 3-ஆம் தேதி முதல் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:தமிழக அரசு அறிவிப்பு

17/Feb/2021 11:08:12

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3 -ஆம் தேதி தொடங்கி மே 21 -ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


தேர்வு அட்டவணை பின்வருமாறு: மே 3 மொழிப்பாடம்.மே 5 ஆங்கிலம். மே 7- கணினி அறிவியல். மே 11 -இயற்பியல், பொருளாதாரம். மே 17-கணிதம், விலங்கியியல்.மே 19-உயிரியியல், வரலாறு.மே 21 - வேதியியல், கணக்குப் பதிவியல்.


காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை என 3 மணி நேரம் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் முன்னதாக காலை 10 முதல் 10.15 வரை கேள்வித்தாள் படிக்க மாணவர்களின் விவரங்கள் சரிபார்க்க என நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 8 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.


        


Top