logo
பவானி அருகே ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வைத்திருந்த  தொழிலாளி கைது

பவானி அருகே ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வைத்திருந்த தொழிலாளி கைது

30/Jul/2021 11:57:46


ஈரோடு,ஜூலை: ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வைத்திருந்த  தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டத்திலிருந்து சமீபகாலமாக வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.  இதையடுத்து மாவட்ட குடிமை பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பவானி அடுத்த காடையம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பவானி, காடையம்பட்டி,  பழனிபுரம் பகுதியைச் சேர்ந்த  சின்னத்தம்பி (வயது 38). கூலித்தொழிலாளி என்பவர் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை  பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, அந்தப் பகுதியில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் வசித்து வருவதால், அவர்களுக்கு ரேஷன் அரிசியை  பதுக்கி வைத்து  கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து குடிமை பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் சின்னதம்பியை கைது செய்தனர். மேலும் 1000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் சின்னதம்பி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Top