logo
திருமாவளவனை கண்டித்து ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

திருமாவளவனை கண்டித்து ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

27/Oct/2020 01:07:38

ஈரோடு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்தும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி  சார்பில் வீரப்பன்சத்திரம் பேருந்து  நிறுத்தம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு  மகளிர் அணி பொதுச் செயலாளர் மோகனப்பிரியா தலைமை வகித்தார்.  தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், வடக்கு மாவட்ட தலைவர் அஜித் குமார், எஸ்.சி, எஸ்.டி ,பிரிவு மாநில துணைத்தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் குணசேகரன், விவேகானந்தன், ஈஸ்வரமூர்த்தி, தெற்கு மாவட்ட மகளிரணி தலைவி புனிதம், வடக்கு மாவட்ட மகளிரணி தலைவி கோகிலா அஜித், டாக்டர் சரஸ்வதி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டு  திருமாவளவனுக்கு  எதிராக முழக்கமிட்டனர். 

அவர்கள் அங்கேயே அமர்ந்து திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் டி.எஸ்.பி.ராஜி தலைமையில் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அனைவரும்  கலைந்து சென்றனர்.


Top