logo
கருங்கல்பாளையம்  கே.ஏ.எஸ்.நகக் குடியிருப்பு பகுதியில் சென்ற லாரியை பொதுமக்கள்  சிறைபிடித்ததால் பரபரப்பு

கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகக் குடியிருப்பு பகுதியில் சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு

30/Jul/2021 11:41:58

ஈரோடு, ஜூலை: ஈரோடு கருங்கல்பாளையம்  கே.ஏ.எஸ்.நகக் குடியிருப்பு பகுதியில் சென்ற கனரக  லாரியை பொதுமக்கள்  சிறைபிடித்ததால் பரபரப்பு.

ஈரோடு கருங்கல்பாளையம் கே. ஏ.எஸ் நகரில் உள்ள  அரசு இளங்கோ வீதியிலிருந்து மரப்பாலம் ரோட்டிற்கு  செல்லும் வழியில் குறுகலாக உள்ளது.  இந்நிலையில் இந்தப் பகுதியில் இந்த இன்னமும் ஏராளமான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன இங்கு குடியிருப்பு பகுதி என்பதால் சாலைகள் குறுகிய அளவில் உள்ளது இதனால் சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்கள் திரும்பி செல்லும் சூழ்நிலை உள்ளது.  

 திரும்பும் போது சில சமயம் விபத்துக்கள் ஏற்பட்டு விடுகிறது இன்றும் ஒரு லாரி நிலக்கரி லோடு ஏற்றிக் கொண்டு கே எஸ் நகரில் உள்ள அரசு இளங்கோ வீதிக்கு வந்து உள்ளது அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு லோடு ஏற்றி வந்த போது லாரியை அதன் டிரைவர் பின்னோக்கி  இயக்கியுள்ளார், அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரை உடைத்து லாரி நின்றது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர் லாரியை சிறைபிடித்த போராட்டத்தில் ஈடுபட்டனர் 

இதுகுறித்து கருங்கல்பாளையம்  தகவலறிந்து  சம்பவ இடத்துக்கு விரைந்து  வந்த போலீஸார்  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் இங்கு குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ளன இங்கு கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

எனவே, இந்த பகுதியில் கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினர். மேலும் லாரி மோதி காம்பவுண்ட் சுவர் இடிந்ததால் அதற்கு தேவையான நஷ்ட ஈடை சம்பந்தப்பட்ட நிறுவனம் தருவதாக கூறினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காட்சி அளித்தது.

Top