logo
ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் ஒரே நேரத்தில் நடந்த 3  போராட்டங்களால்  பரபரப்பு

ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் ஒரே நேரத்தில் நடந்த 3 போராட்டங்களால் பரபரப்பு

23/Feb/2021 07:39:50

ஈரோடு, பிப்: ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஒரே நாளில் நடந்த 3 போராட்டங்களால் அலுவலக வளாகம் பரபரப்பானது.

 அங்கன்வாடி அமைப்பாளர்கள், உதவியாளர்கள் 6  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதேபோல் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள்  தாலுகா அலுவலகத்தில் செவ் வாய்க்கிழமை கருப்பு  உடை அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி  முழக்கமிட்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிக ளுக்கு உதவித் தொகை ரூ.3 ஆயிரமாகவும்,  கடுமையாக பாதிக்கப்பட்ட  மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

தனியார் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலைவாய்ப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி  மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் தாலுகா அலுவலகத்தில் குடியிருப்பு போராட்டத்தை தொடங்கி னர். தொடர்ச்சியாக அங்கேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.  ஏற்கெனவே வருவாய்த் துறை ஊழியர்கள் 10 அம்ச  கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஒரே நாளில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகக் காட் சியளித்தது. குறிப்பாக அங்கன்வாடி ஊழியர்கள் அனைத்து இடங்களிலும்  நிறைந்து காணப் பட்டனர். ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்  வளாகத்தில் திரணடதால்  பரபரப் பாக காணப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்  ஆய்வாளர்கள்  ரவிக்குமார், பன்னீர்செல்வம், பாலமுருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Top