logo
பாமக வின் போராட்டம் தேர்தலுக்கான நாடகமே: ஈரோட்டில் கனிமொழி எம்பி   பேட்டி

பாமக வின் போராட்டம் தேர்தலுக்கான நாடகமே: ஈரோட்டில் கனிமொழி எம்பி பேட்டி

01/Dec/2020 10:29:44

ஈரோடு: பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டமானது தேர்தலுக்கான நாடகமாகவே கருதுவதாக திமுக எம்பி. கனிமொழி தெரிவித்தார்.

 விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரசார பயணத்தை ஈரோட்டில் இன்று 2-ஆவது நாளாக தொடங்கிய கனிமொழி  செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: அதிமுக ஆட்சி பெரியாரின் கொள்கைக்கு  எதிரான ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். வருகிற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஜனி அரசியலுக்கு வந்தால் கருத்து தெரிவிக்கலாம்.பாமகவின் இட ஒதுக்கீடு  போராட்டம் தேர்தலுக்கான நாடகமகமாகவே நான் கருதுகிறேன்.சமூகநீதிக்காக பாஜக எதுவும் செய்யவில்லை என்றும்  சமூக நீதிக்கு எதிராரக  பாஜக  செயல்படுகிறது. இதில் திமுகவை குறை கூட பாஜகவுக்கு  அருகதையில்லை. மு.க.அழகிரி தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் ,  அரசியலில் ஈடுபடலாம் , அது குறித்து தெரிவிக்க விரும்பவில்லை.திராவிடத்தை யாரும் வீழ்த்த முடியாது , சுயமரியாதை உணர்வையும் யாரும் வீழ்த்திட

முடியாது. இது பெரியார் மண்.அதிமுக  சுயமரியாதைய இழந்துள்ளது என்றார் கனிமொழி. 


Top