logo
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்கள்  ரத்து செய்யப்படும்- ராகுல் காந்தி  உறுதி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்- ராகுல் காந்தி உறுதி

04/Oct/2020 05:46:13

காங்கிரஸ்  கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களும் கிழித்து குப்பை தொட்டியில் வீசப்படும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கலந்துகொண்டு டிராக்டர் பேரணியை இன்று தொடக்கி வைத்தார்.

முதற்கட்டமாக பாத்னி கலான் பகுதி முதல் ஜாத்பூர் வரை  நடைபெற்ற டிராக்டர் பேரணிக்குராகுல்காந்தி தலைமை வகித்தார்.பின்னர் விவசாயிகள் மத்தியில் பேசிய அவர், வேளாண் மசோதாக்களால் பிரச்னை இல்லை என்றால், விவசாயிகள் எதற்காக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று கேள்வி எழுப்பினார். 

கரோனா வைரஸ் தொற்று பரவிவரும் சூழலில் வேளாண் மசோதாக்கள் அவசர அவசரமாக சட்டமாக நிறைவேற்றப்பட்டது ஏன்?. விவசாயிகள் நலனுக்காக வேளாண் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டது என்றால் அது குறித்து ஏன் விரிவான விவாதம் நடத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

ஹாத்ரஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்டவகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார் ராகுல்காந்தி

Top