12/Dec/2020 10:57:04
ஈரோடு- டிச: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலை ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் பார்க் மற்றும் மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.இதேபோல் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிலை மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதைடுத்து சிலைகள் திறக்க அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர் .
இந்நிலையில், இந்த சிலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 16-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணி அளவில் இரண்டு ஜெயலலிதா சிலைகள் ஒரு எம்ஜிஆர் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.
அமைச்சர்கள் செங்கோட்டையன் தங்கமணி கருப்பணன் உடுமலை ராதாகிருஷ்ணன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஜெயலலிதா- எம்ஜிஆர் சிலையை திறந்து வைக்கின்றனர். இதுபோல் மாவட்ட கட்சி அலுவலகத்தில்உள்ள மேல் அரங்கையும் திறந்து வைக்கின்றனர். இதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள 80 அடி உயர கம்பத்தில் கொடிகளை ஏற்றி வைக்கின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே .எஸ்.தென்னரசு, சிவசுப்ரமணி ஆகியோர் செய்து வருகின்றனர்