logo
திருமலைராயசமுத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நிவராண உதவிகளை வழங்கல்

திருமலைராயசமுத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நிவராண உதவிகளை வழங்கல்

19/Jul/2021 11:14:42

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டைமாவட்டம், குன்றாண்டார்கோவில்  ஊராட்சி ஒன்றியம், திருமலைராயசமுத்திரம் கிராமத்தில் தனியார் அமைப்பின் சார்பில்  (19.07.2021) நடைபெற்ற நிகழ்வில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழகத்தில் கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கண்ட தீவர நடவடிக்கையின் காரணமாக கோவிட் நோய் தொற்று பெருமளவு குறைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

அதன் அடிப்படையில்,திருமலைராயசமுத்திரம் கிராமத்தில் தனியார் அமைப்பின் சார்பில் 46 மாற்றுத்திறனாளிகளுக்கு காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களை கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட தீவர நடவடிக்கையின் காரணமாக கோவிட் தொற்று இரட்டை இலக்கத்தில் குறைந்துள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடவெளியை கடைபிடித்தல், கைகளை கழுவுதல் போன்ற கோவிட் தடுப்பு விதிமுறைகளை தவறாது பின்பற்றி கோவிட் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பொதுமக்களின் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

இந்நிகழ்வில், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி ,  முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் போஸ், வெங்கடாசலம், எம்.எம். பாலு, அசோக்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Top