25/Jun/2021 09:18:29
கரூர், ஜூன்: கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காகிதபுரத்தில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர நேரில் நேரில் பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
கரூர; மாவட்டம் மண்மங்கலம், புகளுர், வேலாயுதம்பாளையம், சோமூர், உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர்டாக்டர் த.பிரபுசங்கர் வெள்ளிக்கிழமை (23.6.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட காகிதபுரத்தில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் வைரஸ் தொற்று பாதிக்காத (பிபிடி-கிட்)கவச உடை அனிந்து சிகிச்சை மையத்திற்குள் சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆண்கள் 12 நபர்கள், பெண்கள் 11 நபர்கள் என மொத்தம் 23 நபர்களை பார்வையிட்டு வழங்கப் படும் சிகிச்சை முறைகள் மற்றும் உணவுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் சுத்துமாக உள்ளதா என்பது குறித்து பார்வையிட்டார்கள்.
இதனை தொடர்ந்து மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் பாலுட்டும் தாய்மர்க ளுக்கும் பிற பெண்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் முகாமினை பார்வையிட்டு உற்சாகப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து புகளுர் வட்டம் முத்தனூரில் நடத்தப்பட்டு வந்த சிறப்பு மருத்து வமுகாமினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அங்கிருந்த மக்களுக்கு கபசூர குடிநீரை வழங்கினார். அப்பகுதியில், வீடுவீடாக சென்று கொரேனா தொற்றுக்கான அறிகுறிக ளுடன் எவரேனும் இருக்கின்றார்களா என்பது குறித்து களப்பணியாளர்கள் நேரில் விசாரித்து கணக்கெடுக்கும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வீடுகளில் இருந்தவர்களிடம் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, மண்மங்கலம் வட்டம் சோமூர்- இடையார்பட்டியில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர் வசித்து வந்த பகுதிக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சி யர் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் உறவினர்களிடம் கலந்துரையாடி, அனைவ ரும் ஆர்டி.பி.ஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், அருகி;ல் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் ஆர;.டி.பி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும், வீடு வீடாக சென்று தொற்றுக்கான அறிகுறிகளுடன் எவரேனும் உள்ளார்களா என்பது குறித்து ஆய்வு செய்திட வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் திருமுக்கூடலூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பெருமளவில் மரம் வளர்க்கு திட்டத்தை பார்வையிட்டு அனைத்து மரங்களையும் முறையாக தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும் என கேட்டுக்கெண்டார்.
இந்நிகழ்வுகளின்போது மருத்துவநலப்பணிகள் இணை இயக்குநர் ஞானக்கண் பிரேம்நிவாஸ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் சந்தோஷ், வட்டாட்சியர்கள் செந்தில்குமார்(மண்மங்கலம்), செந்தில் (புன்செய் புகளுர்) வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.