logo
புதுக்கோட்டை அருகே சுய உதவிக்குழு நடத்திவந்த ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தை தீயிட்டுகொளுத்திய நபர் கைது

புதுக்கோட்டை அருகே சுய உதவிக்குழு நடத்திவந்த ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தை தீயிட்டுகொளுத்திய நபர் கைது

17/Jul/2021 12:54:23

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை அருகே பூவரசங்குடி கிராமத்தில்  மகளிர் சுயஉதவிக்குழுவினரால் நடத்தப்பட்டு வந்த  ஆயத்தை ஆடை நிறுவனத்தை தீயிட்டு கொளுத்திய  அதே பகுதியைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.  இதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருகள் எரிந்து சேதமடைந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

புதுக்கோட்டை அருகே பூவரசங்குடி கிராமத்தில் 35-க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு பெண்கள் இணைந்து பூவை கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் பெண்களுக்கான ஆயத்த ஆடைகள், தேசியக்கொடி தைத்தல் மற்றும் மண்பாண்ட பொருட்கள் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் பழனிச்சாமி என்பவர் கடந்த சில நாள்களாக  சுய உதவிக்குழு கட்டிடத்துக்கு வந்து அங்கு  பணியாற்றி வந்த  பெண்களை மிரட்டி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது .

இதனையடுத்து  சனிக்கிழமை காலை 7 மணி அளவில் பூட்டியிருந்த மகளிர் சுய உதவிக்குழு  கட்டிடத்தின்  பூட்டை பழனிச்சாமி என்பவர் உடைத்து உள்ளே சென்று ஆயத்த ஆடைகள் மற்றும் தேசியக்கொடிகள் மீது பெட்ரோலை ஊற்றிகொளுத்தினாராம்.  இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர் இதில் தேசியக்கொடி ஆயத்த ஆடைகள் தையல் மிஷின் உள்ளிட்ட சுமார் ரூ. 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.  இச்சம்பவத்தில் தொடர்புடைய  பழனிச்சாமியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Top