logo
பணி நிரந்தரம் செய்ய  சத்துணவு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

பணி நிரந்தரம் செய்ய சத்துணவு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

11/Jul/2021 01:42:03

புதுக்கோட்டை, ஜூலை:சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி  சத்துணவு ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து அடிப்படை ஊதியம் வழங்க  வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

புதுகிகோட்டை மாவட்ட அறிவியியல் இயக்கம் அலுவலக கூட்டரங்கில்  மாவட்டத் தலைவர்  கே  சுப்ரமணியன்       தலைமையில்   நடைபெற்ற     தமிழக சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்:    

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள  அரசையும், முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு. க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்  பெருமக்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பது.  தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சத்துணவு ஊழியர் கோரிக்கைகளான பணிநிரந்தரம் மற்றும் அடிப்படை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர்  நிறைவேற்ற வேண்டும்.

கடந்த 30  ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ  2 ,000 மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் ரூ. 2000 -ஐ வைத்து வாழ்கை நடத்த மிகவும் சிரமமாக உள்ளது.தமிழக முதல்வர் அவர்கள் பரிசீலனை செய்து மாதம் ரூ. 5 000 மாக உயர்த்தி வழங்க வேண்டும்.     தமிழகத்தில் சத்துணவு ஊழியர் காலிப் பணியிடம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளித்திறக்கப்பட்டால்  சத்துணவு மையங்கள் செயல்பட பாதிப்பு உருவாகும். எனவே காலிப்பணியிடங்களை நிறைவேற்ற வேண்டும். 

சத்துணவு ஊழியர்களுக்கான பணப்பலன் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு உண்டான பணப்பலன்கள் விரைவாக கிடைத்திட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள்  கருணாநிதி,சுப்பிரமணி  கல்யாணசுந்தரம்  நாகராஜன் ராஜேந்திரன்,மல்லிகா,சரோஜா ,  சித்திராதேவியிடம்    உட்பட பலர்  கலந்து கொண்டனர்.முன்னதாக  மாவட்ட பொருளாளர்   ஆர்.கல்யாண சுந்தரம்  வரவேற்றார்.மாவட்ட செயலாளர்  எஸ்.அம்பிகாபதி   அறிக்கை சமர்ப்பித்தார்.புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் எ.நாகராஜன் நன்றி  கூறினார்.                              

Top