logo
ஆன்லைம் மூலம் ஆற்று மணல் விநியோகம் நிறுத்தம்: 4 மாதங்களாக காத்திருக்கும் மணல் லாரிகள்

ஆன்லைம் மூலம் ஆற்று மணல் விநியோகம் நிறுத்தம்: 4 மாதங்களாக காத்திருக்கும் மணல் லாரிகள்

10/Jul/2021 10:33:19

சென்னை, ஜூலை:  சட்டமன்ற தேர்தலைக்காரணம் காட்டி ஆன்லைம் மூலம் ஆற்று மணல் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டதால்  மணலுக்காக 4 மாதங்களாக  மணல் லாரிகள் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது.

இது தொடர்பாக  தமிழ்நாடு மாநில  மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு  வெளியிட்ட அறிக்கை:

மணல்லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் சார்பாக ஆற்று மணல் வழங்க கோரி தொடர்ந்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு  சென்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலை காரணம் காட்டி ஏற்கெனவே அரசு சார்பாக ஆன்லைன் முறையில் வழங்கப்பட்ட ஆற்று மணல் விநியோகம் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது.

 இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் ஆற்று மணல் வழங்குவது நிறுத்தப்பட்டு 120 -ஆவது நாளை கடந்துவிட்டது. கடந்த நான்கு மாதங்களாக ஆற்று மணல் விநியோகம் நிறுத்தப்பட்டதால் லாரி உரிமையாளர்கள் மணலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .

லாரிகள் இயக்கப்படாமலேயே லாரி உரிமையாளர்கள் சாலை வரி(ROAD TAX) காப்பீடு வரி(INSURANCE) செலுத்தும் நிலை உள்ளது. மேலும் கடன் தவணையை சரிவர செலுத்த முடியாமல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளார்கள்.

லாரி உரிமையாளர்கள் மற்றும்லாரிகள் இயக்கப்படாததால் லாரி ஓட்டுநர்களும் வேலை இழந்து  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஏற்கெனவே தொடங்கப்பட்ட கட்டுமான வேலைகளும் மணல் இல்லாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது இதனால் கட்டுமான தொழில் செய்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஆற்று மணல் வழங்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Top