logo
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பயோ டீசஸ் தயாரிப்புக்காக சேகரிக்கும் திட்டம் : புதுக்கோட்டையில் தொடக்கம்

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பயோ டீசஸ் தயாரிப்புக்காக சேகரிக்கும் திட்டம் : புதுக்கோட்டையில் தொடக்கம்

05/Jul/2021 11:44:26

புதுக்கோட்டை, ஜூலை:  பயோ டீசலாக மாற்றும் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை உணவகங்களில் சேகரிக்கும் திட்டம்  புதுக்கோட்டை மாவட்டத்தில்  தொடங்கப் பட்டுள்ளது.

புதுக்கோட்டையிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் எஸ். பிரவீண்குமார் பங்கேற்று திட்டத்தை தொடக்கி வைத்து பேசியதாவது: உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஒரு முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும்பட்சத்தில் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் தின்பண்டங்களை பொதுமக்கள் உட்கொள்ளும்போது மனிதர்களின் உடல் நலததிற்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்புக்கள் உற்பத்தி ஆகிறது.


சமையலுக்கு பயன்ப டுத்தப்படும் எண்ணெயில் 25 சதவீதம் டோட்டல் போலர் காம்பவுண்ட் குறைவாக உள்ள எண்ணெய் மட்டுமே சமையலுக்கு உகந்த எண்ணெய் ஆகும். ஒரு முறைக்கு மேல் பயன்படும் பட்சத்தில் எண்ணெயின் தரம் குறைந்துவிடும்.

இதனால் மனிதர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சரக்கரை, இதய நோய், உடல் பருமன் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மறுசுழற்சிக் காக சிறிய நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதனை தவிர்க்கவும்,

பொதுமக்களின் நலனை பாதுகாத்திடவும், பயன்படுத்திய அனைத்து எண்ணெய் வகைகளையும் மீண்டும் பயன்படுத் தாமல் தவிர்ப்பதற்காகவும், உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் பயன் படுத்திய எண்ணெ யினை சேகரித்து சுத்திகரிப்பு செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது .

எனவே, பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, உணவகங்கள் மற்றும் இனிப்பகங் கள் அரசு மூலம்  மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு உணவகங்கள் முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என்றார்.


இது தொடர்பாக திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கான  எண்ணெய் சேகரிப்புத் திட்டத்தை  ஒருங்கிணைக்க  உணவு பாதுகாப்புத்துறையால் நியமிக்கப் பட்ட  திருச்சி  கே.பி. எனர்ஜி கார்பரேஷன்  நிர்வாக இயக்குநர்  கிஷோர் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  உணவகம் மற்றும் இனிப்பகங்களிலிருத்து பயன்படுத்தப் பட்ட எண்ணெயினை சேகரிக்கும் நடவடிக்கை முதற்கட்டமாக புதுக்கோட்டை நகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில், 40 உணவகங்களுக்கு  எண்ணெய் சேகரிப்பதற்காக 25 லிட்டர் மற்றும் 50 லிட்டர் கொள்ளவு கொண்ட கேன்கள் வழங்கப்பட்டுள்ளன. 

 இதில் 30 லிட்டர் வரை ரூ.25 எனவும், 30 லிட்டருக்கு மேல் வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ 30 எனவும் விலை நிர்ணயம் செய்து உணவகங்களிலிருந்து சேகரிக்கப்பட உள்ளது. பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை திண்டுக்கல் என 4 மாவட்டங்களி லிருந் து பயன்படுத்திய எண்ணெ யினை சேகரித்திட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனம் மூலம் எங்கள்  நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிறுவனம் 4 மாவட்டங்களின் மூலம் சேகரிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட எண்ணெயினை திருச்சியில் சேமித்து வைத்து குறிப்பிட்ட கொள்ளளவு பெறப்பட்டவுடன் அதனை சுத்திகரிப் பதற்காக பெங்களூரு ரூகோ அல்லது சென்னையிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.அங்கு பயோ-டீசலாக சுத்திகரிப்பு செய்து, அது வாகன பயன்பாட்டிற் காக பிற எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றார் அவர். 

 நிகழ்ச்சியில். உணவு பாதுகாப்பு தர நிறுவன அலுவலர்கள்  மகேஷ், விஜயகுமார் மற்றும்    உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர்  கலந்துகொண்டனர்.

Top