28/Sep/2020 05:15:06
விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 இடங்களில்(28.9.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை திலகர் திடலில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் தலைமையில் தனிமனித இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு, நிர்வாகிகள் க. நைனாமுகமது, அரு. வீரமணி, டாக்டர் முத்துராஜா, எம்.எம். பாலு, செல்வராஜ், முல்லைமுபாரக், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, ஐஜேகே உள்ளிட்ட தோழமை கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, பெருங்களூரில் புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலும் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய-மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறறது.