09/Jan/2021 11:37:53
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூரில் டாஸ்மாக் விற்பனையாளர் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ2 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோபிச்செட்டிபாளையம், வரப்பாளையம் அருகே உள்ள குமாரபாளையத்தில் இயங்கி வரும்அரசு மதுபானக்கடை விற்பனையாளர் ஆறுமுகம். இவர் சனிக்கிழமை இரவு விற்பனையை முடித்துவிட்டு அதில் கிடைத்த வருவாய் தொகை ரூ 2 லட்சத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்றார்.
அப்போது, கெடாரை என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 3 நபர்கள் ஆறுமுகத்தை வழிமறித்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவர்களிடம் இருந்த ரூ. 2 லட்சத்தை பறித்து சென்றனர். இது குறித்த புகாரனிபேரில் வரப்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்