logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் தினசரி  கொரோனா பரிசோதனை எண்ணிக்கை  2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது:  ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

21/Apr/2021 04:59:28

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை மாவட்டத்தில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 2 ஆயிரமாக  அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்,  அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்  தேவையான  அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

புதுக்கோட்டை நகரில் உள்ள தனியார் வணிக வளாகங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவது தொடர்பாக நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் மேலும் கூறியதாவது: கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில்  ஆக்ஸிஜன் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்ற ஆண்டே கூடுதலாக ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

 புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறுநீரக ஒப்புயர்வு மையத்தை முழுவதுமாக கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இங்கு 6 கே.எல் டேங்க் அமைக்கப்பட்டி ருந்ததுடன், தற்பொழுது கூடுதலாக ஒரு 6 கே.எல் டேங்க் அமைக்கப்பட்டு மொத்தம் 12 கே.எல் டேங்க்  நிறுவப்பட்டு, அதில்  தேவை யான அளவு ஆக்ஸிஜன் இருப்பில்  வைக்கப்பட்டுள்ளது..


 புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பு விகிதம் 1.6 சதவீதத்தில் இருந்தது. தற்பொழுது  கொரோனா பாதிப்பு விகிதம் 3 சதவீதமாக அதிகரித் துள்ளது. ஏற்கெனவே தினமும் 1,000 முதல் 1,500 எண்ணிக்கையில் கொரோனா பரிசோத னை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்பொழுது கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை  2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்  என்றார் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

இதில்,  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர்  டெய்சிகுமார், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன், வட்டாட்சியர் முருகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  


Top