logo
வடிவேலு திரைப்பட பாணியில்  பெருந்துறையில் கோவில் காணமால் போனதாக ஒட்டப்பட்ட  சுவரொட்டிகள்

வடிவேலு திரைப்பட பாணியில் பெருந்துறையில் கோவில் காணமால் போனதாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

05/Jul/2021 12:55:25

ஈரோடு, ஜூலை கண்ணும் கண்ணும் என்ற படத்தில் நடிகர் வடிவேலு கிணற்றைக் காணவில்லை என்று கூறி போலீசாரை அலைய விடும் காட்சி பொதுமக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. இதைப்போல் நம்ப முடியாத சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதைப்போல ஒரு சம்பவம்  நடந்துள்ளது. ஆனால் இந்த முறை காணாமல் போனது கிணறு இல்லை கோவில். காணாமல் போன கோவிலை மீட்டுத் தர வலியுறுத்தியும், கோவிலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தங்க சன்மானம் வழங்கப்படும் எனவும் பாரதிய ஜனதா பிரமுகர் ஒருவர் பெருந்துறை நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார்.

பெருந்துறை அடுத்த பட்டக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பட்டக்காரன் சசிதயாள். இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி பொது செயலாளராக உள்ளார்சசிதயாள் பெருந்துறை தாசில்தார் கார்த்திக்கை சந்தித்து ஒரு மனு அளித்தார்.

அந்த மனுவில், பெருந்துறை அடுத்த சீனாபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சிவன் கோவில் இருந்து வந்தது. இந்த கோவில்  பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். ஆனால் இந்த கோவில் திடீரென காணவில்லை மேலும் அங்கிருந்த சாமி சிலைகளையும் காணவில்லை. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு காணாமல்போன சிலைகளையும் கோவிலையும் மீட்டுத்தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து  பெருந்துறை பகுதி முழுவதும் சசிதயாள் பழமை வாய்ந்த சீனாபுரம் சிவன் கோவிலை காணவில்லை. கோவிலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று பரபரப்பான போஸ்டரை ஒட்டி இருந்தார். பெருந்துறை பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டரை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இந்த சம்பவம் பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Top