logo
தொகுதி மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்து போக்குவரத்து வசதி செய்யப்படும்: அமைச்சர் எஸ். ரகுபதி பேச்சு

தொகுதி மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்து போக்குவரத்து வசதி செய்யப்படும்: அமைச்சர் எஸ். ரகுபதி பேச்சு

04/Jul/2021 08:53:09

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லெட்சுமிபுரத்தில்  மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் (04.07.2021)  நடைபெற்ற நிகழ்வில்  திருமயம் தொகுதியின் எம்எல்ஏவும், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சருமான எஸ்.ரகுபதி  கலந்து கொண்டு  அரசு  பேருந்து  சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி  புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று  லெட்சுமிபுரம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து  சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டைக்கு நேரடியாக செல்லும் வசதி கிடைத்துள்ளது. இப்பேருந்து காலை 7.50 மணி, 11.35 மணி மற்றும் 4.5 மணிக்கு என தினமும் மூன்று நடைகள் இயக்கப்படும்.

ஏற்கெனவே இப்பகுதி பொது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி இந்த  கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மகளிர் அரசு நகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி மகளிர் நகர பேருந்தில் கட்டணமின்றி பயணம் செய்து பயன்பெறலாம்.

திருமயம் தொகுதியில்ஏற்கெனவே  இயங்கி வந்த 21 வழித்தடங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அந்த வழித்தடங்களில் பொதுமக்களின்  கோரிக்கைக்கு ஏற்ப தேவையான பகுதிகளுக்கு  படிபடியாக  மீண்டும்  பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும். மேலும் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தேவையான இடங்களில் பேருந்து வசதிகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பொதுமக்களின் அடிப்படை தேவைக ளுக்கு முன்னுரிமை அளித்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் இளங்கோவன், புதுக்கோட்டை  வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு () சிதம்பரம், ஊராட்சிமன்றத் தலைவர் இராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top