logo
ஈரோடு வைராபாளையத்தில் தடுப்பு ஊசி போடுவதற்காக  மழையில் குடைப்பிடித்தபடி வரிசையில் காத்திருந்த மக்கள்

ஈரோடு வைராபாளையத்தில் தடுப்பு ஊசி போடுவதற்காக மழையில் குடைப்பிடித்தபடி வரிசையில் காத்திருந்த மக்கள்

03/Jul/2021 05:29:23

ஈரோடு, ஜூலை: ஈரோடு வைராபாளையம் பகுதியில்  தடுப்பு ஊசி போடுவதற்காக கொட்டும்  மழையில் குடைப்பிடித்தபடி  பொது மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தை உணர்ந்த மக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் சில தடுப்பூசி மையங்களில் மக்கள் இரவு முதலே காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக தடுப்பூசி செலுத்துவது எளிமையாக்கும் வகையில் மூன்று கட்டங்களாக சுழற்சி முறையில் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சனிக்கிழமை ஈரோடு, சென்னிமலை, மொடக்குறிச்சி, தாளவாடி உள்ளிட்ட 15 இடங்களில் உள்ள 100மையங்களில் 9ஆயிரத்து 500 கோவிசீல்டு தடுப்பூசிகளும் 500 கோவாக்சின் தடுப்பூசிகளும் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி பகுதிக்குள்பட்ட வைராபாளையம் நால்ரோடு பகுதியில் கொட்டும் மழையிலும் குடை பிடித்தப்படி தடுப்பூசி போடுவதற்காக வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.

Top