logo
மொடக்குறிச்சி தொகுதிக்கான கொரோனா  ஸ்கீரினிங் சென்டர் நஞ்சை ஊத்துக்குளியில் தொடக்கம்

மொடக்குறிச்சி தொகுதிக்கான கொரோனா ஸ்கீரினிங் சென்டர் நஞ்சை ஊத்துக்குளியில் தொடக்கம்

13/May/2021 05:22:09

ஈரோடு, மே:ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஒன்றிய பகுதியில் கொரோனா பாதித்தவர்களை பரிசோதனை செய்யும் ஸ்கீரினிங் சென்டர் மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள அல்-அமீன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மொடக்குறிச்சி எம்.எல்.சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி  வைத்தார்.

 மொடக்குறிச்சி ஒன்றியகுழு தலைவர் கணபதி, மொடக்குறிச்சிஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.பி.கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொடக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ, கொடுமுடி வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் ஆகியோர் ஸ்கீரினிங் சென்டர் பயன்பாடு குறித்து விளக்கி பேசினர்.

இதுகுறித்து மொடக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ பேசியதாவது: தற்போது, நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தற்போது கொரோனா பரிசோதனை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் பலநிலைகளில் உள்ளனர்.

ஒருசிலர் லேசான பாதிப்புடனும், ஒருசிலர் 50சதவீத பாதிப்பிலும், ஒருசிலர் 90சதவீத பாதிப்பிலும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும், பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி சிசிக்சை அளிக்க இயலாத சூழல் தற்போது உள்ளதால், இவர்களை வகைப்படுத்தி தகுந்த சிகிச்சை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள அல்-அமீன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்கீரினிங் சென்டருக்கு அனுப்பி வைக்கப்படுவர். அங்கு லேசான பாதிப்புடன் உள்ளவர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுவர். தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாமல், தனி அறை, கழிப்பறை இல்லாமல் கூட்டுக்குடும்பமாக உள்ளவர்களை ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவர்.

மேலும், கொரோனா தொற்றால்; பாதிக்கப்பட்டு, ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகள் பெருந்துறையில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவரின் பரிந்துரையின்படி அனுப்பி வைக்கப்பட்டு, தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். இதற்கான அனைத்து படுக்கை வசதி, மருத்துவ வசதிகளை மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்றார் அவர்.

நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல். .பாலகிருஷ்ணன், பாஜக மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், மொடக்குறிச்சி வட்டாட்சியர் சங்கர்கணேஷ்வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், ரமேஷ்(கி.), ஒன்றிய குழு துணைத்தலைவர் மயில் () சுப்பிரமணி, குளுர் ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ், மருத்துவர்கள் சுகுமார், சரண்யா, நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சிமன்ற துணைத்தலைவர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

 

                                                  

        

Top