logo
நீட்தேர்வு விவகாரம்: நீதியரசர் ஏ.கே. ராஜன் உயர்நிலைக்குழுவிடம் தமிழ்நாடு பத்திரிகை , ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பினர் மனு

நீட்தேர்வு விவகாரம்: நீதியரசர் ஏ.கே. ராஜன் உயர்நிலைக்குழுவிடம் தமிழ்நாடு பத்திரிகை , ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பினர் மனு

23/Jun/2021 07:37:56

சென்னை, ஜூன்: நீட்தேர்வு விவகாரம் தொடர்பான பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க தமிழக அரசால் அமைக்கப்பட்ட  நீதியரசர் .கே. ராஜன் உயர்நிலைக்குழுவிடம் தமிழ்நாடு பத்திரிகை , ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பினர்  சார்பில் மனு அளிக்கப்பட்டது.

 கோரிக்கை மனு விவரம்:

மருத்துவக் கல்வியில் தனித்துவமாக  மிளரும்  தமிழ்நாட்டில், ஆண்டுதோறும்  ஏழாயிரத்துக்கும்  அதிகமான மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். கல்வி பயில  எவ்விதமும் தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக சமூக நீதிக் கொள்கையால்  நாட்டுக்கே  முன்னோடியாக உள்ளது தமிழ்நாடு.

இந்த நிலையில்  மருத்துவக்கல்வி  பயில நீட் என்ற நுழைவுத்தேர்வை   இந்திய அரசு திணித்துள்ளதால், தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில்  பயிலும் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே கல்வி முறை இல்லாத நாட்டில், ஒரே  நுழைவுத்தேர்வு  சாத்தியமில்லை. அந்த நுழைவுத்தேர்வில் ஏராளமாக குளறுபடிகள் முறைகேடுகள்.

பள்ளிக்கல்வியை  முடித்த பிறகும் மீண்டும்  தேர்வுக்காக லட்சக்கணக்கான ரூபாய்கைள செலவு  செய்து பயிற்ச்சிக்கு செல்ல வேண்டிய நிலை தவறானது. எனவே, தமிழ்நாட்டில்  மக்களின்  மருத்துவக்  கனைவ நிறைவேற்ற நீட் தேர்வில் இபுந்து விலக்கு அளிப்பது மட்டுமே தீர்வு என தமிழ்நாடு  பத்திரிகையாளர்கள்  மற்றும் ஊடக  அமைப்புகளின்  கூட்டமைப்பு கருதுகிறது.

எம்பிபிஎஸ்  படிப்புக்கான மொத்த இடங்களில் தமிழ்நாட்டில்தான் 85 சதவீதம் இடங்களின் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க  அவசியம் வேண்டும்.   பட்ட மேற்படிப்பு  இடங்களான எம்டி, எம்எஸ், என்பன மற்றும் பட்டயப் படிப்புகளில்  தமிழ்நாட்டுக்குரிய  50 சதவீத  இடங்களின் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

எம்பிபிஎஸ்  படிப்பதற்கான மாணவர் சேர்க்கையின்போது  அரசுப் பள்ளிகளில் பயின்ற  மாணவர்கர்களுக்கு  நீதியரசர்  கலையரசன்  அறிவுறுத்திய  10 சதவிகித  இட ஒதுக்கீட்டை  வழங்க  வேண்டும். மேலும் , அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும்   மாணவர்களுக்கு  5 சதவிகிதம்  இட ஒதுக்கீடு  வழங்க வேண்டும்இந்தக் கோரிக்கைகளை  உயர்நிலைக்குழு   கவனமாகப் பரிசீலித்து  உரிய பரிந்துரைகளை  தமிழ்நாட்டு அரசுக்கு  அளிக்க வேண்டும்  எனக் கேட்டுக் கொள்கிறோம்  என  அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கையை  வலியுறுத்தும் அமைப்புகள்: 1. மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்(CMPC)  2. தமிழ்நாடு பெண்  ஊடகவியலாளர்கள் மையம் 3. தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்  சங்கம் 4. அகில இந்திய பத்திரிகை யாளர் சங்கம்  (AIUJ)  5. கோயம்புத்தூர்  பத்திரிகையாளர் மன்றம் 6. திருச்சி பத்திரிகையாளர்  மன்றம் 7. திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம்.

8. நெல்லை பத்திரிகையாளர்  மன்றம் 9 . சேலம்  பத்திரிகையாளர் மனறம் 10. புதுக்கோட்டை  மாவட்ட பத்திரிகையாளர்  சங்கம் 11. திருவண்ணாமலை பத்திரிகையாளர்  மன்றம் 12. ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் 13. தமிழ்நாடு பத்திரிகையாளர்  சங்கம் (ஈரோடு).

14. விழுப்புரம்  பத்திரிகையாளர் நலச் சங்கம் 15. திருப்பூர்  மாவட்ட பத்திரிக்கையாளர்  சங்கம் 16. தேனி பிரஸ் யூனியன் 17. நாகர்கோவில்  பத்திரிகையாளர்  மன்றம் 18. தமிழக  பத்திரிகையாளர் சங்கம் 19. கிருஷ்ணகிரி  மாவட்ட பத்திரிகையாளர் மன்றம் 20. தமிழ்நாடு  பத்திரிகையாளர் சங்கம் (நாமக்கல்) 21.பியர்ல்சிட்டி  பத்திரிகையாளர் சங்கம் (தூத்துக்குடி) 22. கரூர்  பத்திரிகையாளர்  மன்றம்.

Top