logo
புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் நவரச விழாவில்  சான்றோர்கள் 28 பேருக்கு  விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது

புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் நவரச விழாவில் சான்றோர்கள் 28 பேருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது

22/Feb/2021 11:27:24

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை இலக்கியப்பேரவை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நவரச விழாவில் சான்றோர்கள் 28 பேருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை இலக்கியப் பேரவையானது தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மூத்த இலக்கியவாதி மு.முத்துசீனிவாசன் அவர்களால் தொடங்கப்பட்ட சமூக அமைப் பாகும். இந்த  சமூகத்தில் ஒவ்வொருத்துறையிலும் வெற்றிப்பெற்ற வெற்றியாளர் களை கண்டறிந்து ஆண்டுத்தோறும்  கௌரவிக்கும் பணியினை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செய்துவரும் உன்னத அமைப்பாக  புதுக்கோட்டை இலக்கியப் பேரவை திகழ்ந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நிகழாண்டில்  சான்றோர்களுக்கு பாராட்டு விருதளிப்பு விழா உள்ளிட்ட நவரச விழா  புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழக வெள்ளி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. 

செந்தூரான் கல்வி குழும இயக்குனர் மீனாவயிரவன் குத்துவிளக்கேற்றி வைத்தார். புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் தலைவர் முத்துசீனிவாசன் வரவேற்புரையாற்றினார். வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்எம்வி கதிரேசன் துவக்க உரையாற்றினார். 

  சிறப்புவிருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா கலந்து கொண்டு மணிவாசகர் பதிப்பக வெளியீடான முத்துசீனிவாசனின்  புகழ்மாலை நூல் மற்றும் ஓய்வுபெற்ற விஞ்ஞானி ராசுவின்புவிக்கோளத்தைப் புரிந்து கொள்வோம்  உள்ளிட்ட மூன்று நூல்களையும்,   பூமாலை நூலினையும், பாலர் பாடும் பாடல்கள் நூலினையும், புவிக் கோளத்தைப் புரிந்துகொள்வோம் நூலையும் வெளியிட்டார்.

தொடர்ந்து,  கவிஞர் அமுதா பாலகிருஷ்ணனுக்கு எழுபதாம் அகவை நிறைவு வைரவிழா  விருதும் , குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எஸ்.ராமதாசுக்கு எழுபதாம் அகவை நிறைவு வைரவிழா  விருதும் , தகவல் முத்துக்கள் இதழ் ஆசிரியர் அப்துல்லத்தீப் எழுபதாம் அகவை நிறைவு வைரவிழா  விருதும் புதுக்கோட்டை அன்னை அறக்கட்டளை செயலாளர் புண்ணியமூர்த்தியின் 84-ஆம் அகவை விருதும், குழந்தைக் கவிஞர் பேரவை நிறுவனர் வெங்கட்ராமனின் 86-ஆம் அகவை விருதும்.  சிவநேயப் பேரவையின் தலைவர் ஈசநேசன் மகஸ்ரீ  எண்பதாம் அகவை முத்து விழா விருதும்.



 இலக்கிய விருதுகள்:    மருத்துவர்கள்  .தனசேகரன், ஆறுமுகம். துரைநாகரத்தினம், வழக்கறிஞர் செந்தில்குமார் கவிஞர் இசைக்கலைஞர் ஜானகி குமரேசன் ,முனைவர் பிரபா, டி .கே.எஸ் .கலைவாணன்,  வி.வைஷ்ணவி,    வி .கணேசசிவம்குருக்கள், வெள்ளைசாமி, பழனிமுத்து, ஆர்.தங்கராஜ்  சாமி.கோவிந்தராசன, கருப்பையா  ராம.பிரசாத், பிரபுசங்கர் ராம சுப்பையா, சிவசக்திவேல், மழபாடி ராஜாராம், மரம் எஸ்.ராஜா, ரேவதி,  ஓவியர் வெங்கடேசன், எழுத்தாளர் ஞானசேகர், தியாகராஜன்,  மனோகரன், ராசு உள்பட 28 சான்றோர்களுக்கு  விருதுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார் . 

விழாவில், தவத்திரு தயானந்தசந்திரசேகரன், தருமராஜன், ராமையா உட்படபலர்  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் சென்னை    திருச்சி   புதுக்கோட்டை இருந்து வந்திருந்த அறிஞர்கள்,பேலஸ் சிட்டிரோட்டரி நிர்வாகிகள் கல்வியாளர்கள் கவிஞர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள்  கலந்து கொண்டார்கள் .கவிஞர்.நிலவை பழனியப்பன் நன்றிகூறினார்  


Top