logo
தனியார்துறையில் வேலை வாய்ப்பு பெற விரும்புவோர் கவனத்துக்கு...

தனியார்துறையில் வேலை வாய்ப்பு பெற விரும்புவோர் கவனத்துக்கு...

01/Oct/2020 11:13:35

தனியார் துறையில் வேலைக்கு செல்ல விரும்பும் இளைஞர்கள் தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தனியார் வேலை இணையத்தில் பதிவு செய்து தங்களுக்கு பொருத்தமான வேலையை எளிதில் தேர்வு செய்யலாம். https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியை Touch செய்தால் Private Job Portal website open ஆகும். முகப்பு பக்கத்தில் நிறுவனங்கள் பதிவு செய்வதற்கும் வேலை தேடுபவர்கள் பதிவு செய்வதற்கும் தனித்தனி தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் பதிவு செய்யும் போது நமது அலைபேசிக்கு வரும் ஓடிபி எண்ணை பயன்படுத்தி எளிதில் பதிவு செய்துகொள்ளலாம். வேலை வழங்கும் தனியார் நிறுவனங்களும் முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள Employers  என்ற தலைப்பிற்குள் சென்று தங்கள் நிறுவனங்களை  பதிவு செய்து கொள்ளலாம். வேலை தேடுபவர்கள் இரண்டு விதமாக job search செய்ய முடியும். 1. District wise job searching. 2. Sector wise  job searching-  ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டுமே பணி செய்ய விருப்பம் உடையவர்கள் அந்த மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ளலாம்குறிப்பிட்ட துறையில் மட்டுமே பணி செய்ய விருப்பம் உடையவர்கள் அந்தத்துறையில் தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்புகளை அறிந்துகொள்ள முடியும். எந்த நிறுவனத்தில் தங்கள் கல்வித் தகுதிக்கு பொருத்தமான பணியிடம்  அறிவிக்கப்பட்டுள்ள தோ அந்த நிறுவனத்தை தேர்வு செய்து குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். நிறுவன பிரதிநிதிகள் உங்களை தொடர்பு கொண்டு நேர்முகத் தேர்வு தொடர்பான விவரங்களை தெரிவிப்பர். தனியார் வேலை இணையத்தில் இதுவரை ஏறத்தாழ 3000 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. ஏறத்தாழ 50,000 இளைஞர்கள் இதில் பதிவு செய்துள்ளனர்.

 இந்த இணையத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் தனது நிறுவனத்திற்கு பொருத்தமான பணியாளர்களை கல்வித்தகுதி வாரியாக, மாவட்ட வாரியாக, வயது வாரியாக தேர்வு செய்து  அவர்களின் அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ள முடியும். பின்னர் நேரிலோ அல்லது அலைபேசி மூலமாகவோ நேர்முகத்தேர்வு நடத்தி தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளரை எளிதில் தேர்வு செய்ய முடியும். இனி வரக்கூடிய காலங்களில் தமிழக அரசின் Private Job Portal மாபெரும் வரவேற்பை பெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனவே வேலைபெறலாம்.

Top