logo
கரூர் மாவட்டத்தில் ரூ.75.65 கோடி மதிப்பில் 3,15,231  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு  சிறப்பு நிவாரண நிதி: அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கல்

கரூர் மாவட்டத்தில் ரூ.75.65 கோடி மதிப்பில் 3,15,231 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கல்

16/Jun/2021 10:34:50

கரூர், ஜூன்: கரூர் மாவட்டத்தில் ரூ.75.65 கோடி மதிப்பில் 3,15,231  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி இரண்டாம்  தவணையாக தலா ரூ.2000/- ரொக்கம் மற்றும்  ரூ.400 மதிப்பிலான 14  பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்வை  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர்  வி.செந்தில் பாலாஜி  தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்   ஆட்சி பொறுப்பை ஏற்ற நாள் முதல் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்கள்.

கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வேலை வாய்ப்பின்றி பொருளாதாரத்தில் சிரமப்படுவதை கருத்தில் கொண்டும், பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருதி கொரோன கால சிறப்பு நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து ஜுன் 2021 மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 2 கோடியே 9 இலட்சம் குடும்ப அட்டைகளுக்கு கொரோனா கால சிறப்பு நிவாரண நிதி உதவித்தொகை இரண்டாம் தவணை தலா  ரூ.2000/- ரூ.4196.38 கோடி மதிப்பிலும் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளில் கூறாத ரூ.400 மதிப்பிலான 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரூ.844. 51 கோடி மதிப்பிலும் ஆக மொத்தம் ரூ.5040.89 கோடி மதிப்பீட்டில் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார்கள்.

அதனடிப்படையில், கரூர் சட்டமன்ற தொகுதிக்குள் பட்ட .வே.ரா.சாலை, நரசிம்மன் நடுவீதி, காந்திநகர், வேலுசாமிபுரம், வெங்கமேடு, அரசு காலணி, ஆச்சிமங்கலம் ஆகியபகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு கொரோனா கால சிறப்பு நிவாரண நிதி இரண்டாம் தவணையாக தலா ரூ2000/- ரொக்கம் மற்றும் தலா ரூ.400 மதிப்பிலான 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலின் வேகம் தற்போது மிகவும் படிப்படியாக குறைந்து வருகிறது.  முதலமைச்சர்  கொரோனா வைரஸ் தாக்கம் பூஜ்ஜிய நிலையை அடைய வேண்டும் என்ற இலக்குடன் அரசு இயந்திரத்தை சுழலவிட்டு பொதுமக்களுக்காக பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார்.

மேலும் நகரப்பேருந்துகளில் இலவசமாக பெண்கள் பயணம் செய்யவும், ஆவின் பால் விலையை குறைத்தும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு கட்டணமில்லா மருத்துவ சேவை வழங்கவும் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார் என்றார் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி.

இதில், மாவட்ட வருவாய் லுவலர்  எம்.லியாகத் ,காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேலு, வருவாய் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் கே. தட்சிணாமூர்த்தி, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.காந்திநாதன், பொது விநியோகத் திட்டத்தின் துணைப்பதிவாளர்  .மனோகர்கரூர் வட்டாட்சியர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Top