logo
உலக சாதனையை பதிவு செய்த  தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆர்.ஜி.ஆனந்த்

உலக சாதனையை பதிவு செய்த தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆர்.ஜி.ஆனந்த்

15/Jun/2021 01:31:47

குழந்தை திருமணம், கொத்தடிமை குற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக உலக சாதனையை பதிவு செய்த தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

புதுதில்லியில் இதற்காக நடைபெற்ற தேர்வில் நூற் றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போதும். அதிக கல்வித் தகுதியைக் கொண்ட மிகவும் இளையவரான புதுக்கோட்டையைச் சேர்ந்த  டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்(35) - மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதலுடன். தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினராக 2018-ம் ஆண்டில்  பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக நியமனம் செய்தார்.

பிரதமரின் நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக, பதவியேற்ற மூன்று ஆண்டுகளில், இரவு, பகல் பாராமல் இந்தியாவின் 258 மாவட்டங்களில் அவர் அரசு முறை பயணம் மேற்கொண்டு, குழத்தைகள் குறை தீர்ப்பு முகாம், சம் வேதனா, அம்பர்லா. போலீஸ் கார்னர் என புதுமையான குழந்தைகள், பெண்கள் நலத்திட்டங்களை அந்தந்த மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்களை சந்தித்து டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் வெற்றிகரமாக செயல்படுத்தினார்.

மாவட்ட ஆட்சியர்கள்  முன்னிலையில், காவல்துறை உள்ளிட்ட 26 அரசுத்துறை அலுவலர்களையும், பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து கூட்டங்கள் நடத்தி, கூட்ட முடிவிற்குள் குறைகளுக்கு தீர்வுகள் கண்டு உரிய உத்தரவுகளும், நிவார ணங்களும் கிடைக்கச் செய்தார். இதனால், குழந்தைகள் கடத்தல், பாலி யல் வன்முறை, குழந்தை திருமணங்கள், கொத்தடிமை குற்றங்கள் வெகுவாக குறையத் தொடங்கின. டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்தின் பணிகளை இந்தியாவின் பல்வேறு மாநில ஊடகங்களும், பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டு பாராட்டினர்.

இந்நிலையில், லண்டன் நகரை தலைமையிடமாகக் கொண்ட  (World Book of Records London) வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனும் சர்வதேச அமைப்பு  டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்தின் களப் பணிகளை வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்து, அதை உலக சாதனையாக  பதிவு  செய்து அறிவித்து சான்றிதழை  வழங்கியுள்ளது.


தனக்கு கிடைத்த உலக அளவிலான இந்த பாராட்டை, பாரத பிரதமராக பொறுப்பேற்று கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அமல்படுத்திவரும்  நரேந்திர மோடி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் தெரிவித்தார்.

மேலும், தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வழிநடத்தி வரும் தமிழக பாஜக மூத்த தலைவர்  சி.பி. ராதாகிருஷ்ணன் , தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளர்  கேசவ விநாயகம்  ஆகியோருக்கு  டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்  தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இவரது சாதனையை குஜராத் பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தலைவர் சி.ஆர்.பட்டீல், கேரளா மாநிலத் தலைவர் குமணம் ராஜசேகரன். தேசிய குழந்தைகள் ஆணையத் தலைவர் பிரியங் வாங் மற்றும் மாநில முதல்வர்கள், ஆளுநர்கள். ..எஸ். .பி.எஸ். அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் தொலைபேசியிலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Top