logo
சத்தியமங்கலம் அருகே புன்செய் புளியம்பட்டி வார சந்தையில் திரண்ட பொதுமக்கள்: நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம்

சத்தியமங்கலம் அருகே புன்செய் புளியம்பட்டி வார சந்தையில் திரண்ட பொதுமக்கள்: நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம்

20/May/2021 05:44:36

ஈரோடு மே: ஈரோடு மாவட்டந், சத்தியமங்கலம் அருகேபுன்செய் புளியம்பட்டி வார சந்தையில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் திரண்டதால்  நோய்த் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டியில் வியாழன்தோறும்  கூடும் சந்தையானது  தமிழகத்தின் இரண்டாவது பெரிய சந்தையாகும். இந்நிலையில்வழக்கம்போல சந்தை கூடியதும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வாரச்சந்தையில் பொருள்கள் வாங்க திரண்டனர்.

  தற்போது தினமும் காலை 6 மணி முதல்  10 மணி வரை 4 மணி நேரம்  காய்கறி கடைகள் இயங்க அரசு அனுமதித்துள்ள நிலையில் பொருட்களை வாங்க பொதுமக்கள் திரளாக குவிந்தது கொரோனா பரவலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கடந்த சில நாள்களாக  புஞ்சைபுளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியையும் மறந்து பொருட்களை வாங்க குவிந்ததால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறையினர்காவல்துறையினர் ஆகியோர் அறிவுறுத்தியும் வியாபாரிகளும் பொதுமக்களும் அஜாக்கிரதையாக இருப்பது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே நோய் தொற்று குறையும் வரை தற்காலிகமாக சந்தையை மூட நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினசரி காய்கறி சந்தையை புளியம்பட்டி பேருந்து நிலையத்தில் அமைக்க வேண்டும் எனவும்அங்கு பொதுமக்கள் உரிய பாதுகாப்புடன் மற்றும் சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 பொதுமக்களும் தங்கள் பொறுப்புணர்ந்து அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மதித்து நடக்க வேண்டும். நோய் தொற்று மேலும் பரவாமல் இருக்க முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Top