logo
தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுத்தெரிவித்து  மணப்பாறை கூட்டுறவு கட்டிட சங்கக் கூட்டத்தில் தீர்மானம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுத்தெரிவித்து மணப்பாறை கூட்டுறவு கட்டிட சங்கக் கூட்டத்தில் தீர்மானம்

01/Jul/2021 12:54:07

மணப்பாறை, ஜூன்: திருச்சி மாவட்டம், மணப்பாறை (R.860)  கூட்டுறவு கட்டிட சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கத்தின் தலைவர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில்  நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்திற்கு துணைத் தலைவர் ஏ.பி.எஸ்.கௌசிக் முன்னிலை வகித்தார்.சங்கத்தின் வரவு செலவுகள் சமர்ப்பிக்கப்பட்டது.சங்க வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என்.தங்கம், எஸ்.எம்.ஷாஜஹான், ஏ.சௌகத் அலி, மோ.திவ்யா, பழனியப்பன், லெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top