logo
  அதிமுக செய்தித் தொடர்பாளராக அப்சரா ரெட்டி நியமனம்: இபிஎஸ்- ஓ.பி.எஸ். அறிவிப்பு

அதிமுக செய்தித் தொடர்பாளராக அப்சரா ரெட்டி நியமனம்: இபிஎஸ்- ஓ.பி.எஸ். அறிவிப்பு

29/Nov/2020 12:58:40

சென்னை: அண்ணா தி.மு.க. செய்தித் தொடர்பாளராக அப்சரா ரெட்டியும் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூகத் தொடர்பு ஊடகங்களில், அண்ணா தி.மு.க.வின் நிலைப்பாடுகள் குறித்து எடுத்துரைப்பதற்காக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் அப்சரா ரெட்டி என்பவர் இன்று முதல் இணைத்துக்கொள்ளப்படுகிறார். தொலைக்காட்சிகள் மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்கள், கழகத்தின் நிலைப்பாடுகள் குறித்து எடுத்துரைப்பதற்காக, அப்சரா ரெட்டியையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும்  கூறியுள்ளனர்

Top