logo
நிவாரண நிதியுதவி திட்டத்தை நடைமுறைப்படுத்திய தமிழக முதல்வருக்கு கரூர் நாடக நடிகர்கள் சங்கம்  கோரிக்கை

நிவாரண நிதியுதவி திட்டத்தை நடைமுறைப்படுத்திய தமிழக முதல்வருக்கு கரூர் நாடக நடிகர்கள் சங்கம் கோரிக்கை

09/Jun/2021 03:27:57

கரூர், ஜூன்: நலிந்த கலைஞர்களுக்கு  மாதாந்திர நிவாரண நிதியுதவி திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வருக்கு கரூர் நாடக நடிகர்கள் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கரூர்  நாடக நடிகர் சங்கம்  வெளியிட்ட அறிக்கை: கலைப் பண்பாட்டுத் துறையின் மூலமாக தமிழக முதல்வர்  ஸ்டாலின்  நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கும்  பெரும் திட்டத்தை துவக்கிவைத்துள்ளதற்கு கரூர் நாடக நடிகர் சங்க உறுப்பினர் கள் சார்பாக நெஞ்சார்ந்த  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


 மேலும் இந்த இக்கட்டான  கொரோனா பேரிடர்  காலகட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நாடக கலைஞர்கள் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டு ஒவ்வொருவருடைய குடும்பத்தினரும்  வாழ்வா சாவா என்ற நிலையில் இருந்து வருகின்றன.  நாடக நடிகர்களின்  குடும்பத்தின்  வாழ்வாதரத்துக்கு  கோடைகாலத்தில் நடைபெறும் பல்வேறு கோயில்  திருவிழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள்தான்  பொருளாதாத ரீதியாக  உதவி செய்து வருகின்றன.

அதில் வரக்கூடிய வருவாயை அந்த ஆண்டு முழுவதும்  வைத்து  வாழ்க்கை நடத்தி வந்தனர்.  ஆனால் சென்ற ஆண்டும் கொரோனா முழு முடக்கத்தால் கலை நிகழ்ச்சிகள் நடக்க வில்லை.  அதே போல  இந்த ஆண்டிலும் கொரோனா முழு ஊரடங்கால் கலைநிகழ்ச்சிகள் தடைபட்டுள்ளன.

எனவே நாடக  நடிகர் நடிகைகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில்  அரசின் பாதுகாப் பு வழிமுறைகளை கடைப்பிடித்து கலை நிகழ்ச்சிகளை நடத்திட அனுமதி வழங்கிட தமிழக முதல்வர்  உதவி செய்ய  வேண்டுமென  அதில் தெரிவித்துள்ளனர்.

Top