06/Nov/2020 08:07:53
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட குமலன்குட்டை, கணபதி நகரில் ரூ 45 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை எம்.எல்.ஏ.க்கள் கே.வி .ராமலிங்கம் ,கே எஸ் தென்னரசு ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.இதனைத்தொடர்ந்து கருங்கல்பாளையம்,கல்லுபிள்ளையார் கோவில் வீதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.22 லட்சம் மதிப்பில் 4 அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனையும் எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்.
மண்டலம் உதவி ஆணையர்கள் அசோக்குமார், விஜயகுமார் பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி சூரம்பட்டி ஜெகதீசன், கோவிந்தராஜன்,தங்கமுத்து, ராமசாமி, பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா ஒன்றிய செயலாளர் பூவேந்திரகுமார், மாவட்ட ஆவின் துணை தலைவர் குணசேகரன் வட்ட செயலாளர் மாதையன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்