logo
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்

30/Sep/2020 11:03:37

ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உள்ளது பவானிசாகர் அணை யாகும். இந்த மொத்த கொள்ளளவு 105 அடி ஆகும். இதன்  முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் பவானி சாகர் அணை 102 அடியை எட்டியது. பின்னர் நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையில் இருந்து  தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கும் கீழ் பவானி பாசனத்திற்கும்  தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 101.86 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,607 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கன அடியும், பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடியும் திறந்து விடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு புதன்கிழமை  நிறுத்தப்பட்டது

Top