logo
ஈரோடு மாநகரில் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

ஈரோடு மாநகரில் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

27/Apr/2021 02:52:29

ஈரோடு, ஏப்: ஈரோடு மாநகராட்சிப்பகுதியில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 ஈரோடு மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது ஆலை வேகமாக பரவி வருகிறது.குறிப்பாக மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தினசரி பாதிப்பு 40, 45 வரை இருந்து வந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு 100 - கடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாநகர் பகுதியில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக ஒரே நாளில் 170 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சி சார்பில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுபோக அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தினால் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


 இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறியதாவது: ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தினசரி கொரோனா  பரிசோதனையை அதிகரித்துள்ளோம். மாநகராட்சி சார்பில் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் முகாமிட்டு அந்த தெருவில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இது தவிர நேற்று நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 7 வாகனங்கள் மாவட்டம் முழுவதும் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் முகாம் நடத்தி பரிசோதனைகள் செய்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்புள்ளது.

 

திங்கள்கிழமை  மட்டும் மாநகர் பகுதியில் 170 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அச்சம் வேண்டாம். பரிசோதனைகள் அதிகரிக்கும் காரணமாக தொற்று அதிகரித்து வருகிறது. இதன் மூலம் நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க முடிகிறது.

இதன் மூலம் பரவலை கட்டுப்படுத்த முடியும்ஸ்கிரீன் சென்று அழைத்து செல்லப்பட்டு நோய் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதுஈரோடு மாநகர் பகுதியில் 90 சதவீதம்  பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் விரைவாக குணம் அடைந்து வருகின்றனர் என்றார் அவர்.

Top