logo
ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

31/May/2021 07:52:08

ஈரோடு, மே: ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் படுக்கை  பிரிவை  முதல்வர் மு..ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் ஈரோடு , திருப்பூர் , கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனோ தொற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை  போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது .

ஈரோடு மாவட்டம்  பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே 610 ஆக்சிஜன் வசதி யுடன் கூடிய படுக்கை இருக்கும் நிலையில் , புதியதாக அமைக்கப்பட்ட 300 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று  ஆய்வு செய்தார்.

புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளை ஆய்வு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்களிடம் சிகிச்சை முறை , ஆக்சிஜன் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.


இதனையடுத்து 5 மருத்துவர்கள் , 5 செவிலியர்களுக்கு புதியதாக பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் , ரோட்டரி சங்கம் மூலம் ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும்  402 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கட்டிட வரைபடத்தையும் பார்வையிட்டார்.

முன்னதாக  பெருந்துறை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் திமுக சார்பில் முன்களப்பணியாளர்களுக்கு  அரிசியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , தமிழக வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி , செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Top