logo
சட்டப்பேரவை  தேர்தலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

சட்டப்பேரவை தேர்தலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

05/Mar/2021 12:02:47

புதுக்கோட்டை, மார்ச்: தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பி. உமாமகேஸவரி.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற  கோவிட்-19 முன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு  தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பி. உமாமகேஸ்வரி கூறியதாவது:

  தமிழக சட்டப்பேரவைத்  தேர்தல்  வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி  நடைபெற உள்ளநிலையில், தேர்தலின்போது  கொரோனா முன் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து  வாக்களிக்க வருபவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்வது வாக்குப்பதிவு நடைபெறும்  நாளன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு கோவிட் தற்காப்பு பொருள்களை வருவாய்துறையினர் வாக்குச் சாவடி மையங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தல். 

வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும்  அலுவலர்களுக்கு முகக்கவசம், சானிடைசர், கையுறைகள் போன்ற கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்யவும், வாக்குச்சாவடி மையங்களில் இருந்து சேகரிக்கப்படும் உயிர் மருத்துவ கழிவுகளை மாவட்ட  நிர்வாகத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்படைக்கவும், வாக்காளர்களை வெப்பமாணி கொண்டு பரிசோதனை செய்து, சானிடைசர் வழங்குவதற்கு ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு 2 தன்னார்வலர்கள்,  8 மையங்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் மற்றும் வட்டாரத்திற்கு ஒரு பொறுப்பு அலுவலர்களை நியமனம் செய்து அனைவருக்கும் ஆரம்ப சுகாதார அளவில் பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் வாக்குச்சாவடி மையங்களை தோ;தல் நாளுக்கு முதல் நாளே தொற்று நீக்கம் செய்தல், தேர்தல் நாளன்று 4 மணி நேரத்திற்கு ஒருமுறை தொற்று நீக்கம் செய்தல், தோ;தல் பணி நிறைவடைந்த பின் வாக்குச்சாவடியினை மீண்டும் முழுமையாக தொற்று நீக்கம் செய்யும் பணியினை மேற்கொள்ளவும், வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட உயிர் மருத்துவ கழிவுகளை உடனுக்குடன் பாதுகாப்பாக அகற்றிட பணியாளர்களை நியமனம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயிh; மருத்துவ கழிவுகளை வாக்குச்சாவடி மையங்களிலிருந்து அப்புறப்படுத்தும் பணியினை மாவட்ட அளவில் கண்காணிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் இருந்துப் பெறப்படும் உயிர்  மருத்துவ கழிவுகளை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள நிறுவனத்திடம் ஒப்படைக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.என்றார் பி. உமாமகேஸ்வரி..

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா; பெ.வே.சரவணன், பொது சுகாதார துணை இயக்குநர்கள் கலைவாணி, விஜயக்குமார், நகராட்சி ஆணையர்(பொ) ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

Top