logo
 பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில்   300 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள்  தயார்:  வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 300 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் தயார்: வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

25/May/2021 07:41:46

ஈரோடு, மே: பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில்  300 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் வரும்  வெள்ளிக்கிழமை செயல்பாட்டுக்கு வரும் என்றார்   வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி .

 ஈரோடு மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை துவக்கி வைத்தபிறகு ஆட்சியர்  சி.கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு  நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம், அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவதுதற்போதைய நிலையில், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதி சற்று குறைவாகவே உள்ளன. அதை அதிகரிக்க, ஈரோடு அரசு மருத்துவமனையில், 131 ஆக்சிஜன் இணைப்பு படுக்கை, 250 என உயர்த்தப்படுகிறது. ஓரிரு நாளில் அவை செயல்பாட்டுக்கு வரும்.

பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 550 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி, 650 என உயர்த்தி உள்ளோம். அவ்வளாகத்தில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட, 300 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் வரும், வெள்ளி கிழமை செயல்பாட்டுக்கு வரும்.

அடுத்த ஒரு வாரத்தில் மேலும், 300 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை, பயன்பாட்டுக்கு வரும். ஜூன், 20க்குள் மேலும், 200 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை பயன்பாட்டுக்கு வரும். இதன் மூலம், 1,550 படுக்கை வசதி, பெருந்துறையில் இருக்கும். ஈரோடு மட்டுமின்றி அருகே உள்ள மாவட்டத்தினரும், படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இணைப்பு கிடைக்கவில்லை என்ற புகார் வராமல் பார்க்கப்படும்.

ஆக்சிஜன் தேவைப்படாமல், கொரோனாவுக்காக சிகிச்சை பெற, 3,500 படுக்கை பள்ளி, கல்லுாரிகளில் ஏற்படுத்தி, 1,000 படுக்கைகள் தவிர மற்றவை காலியாக உள்ளன. வீடுகளில் தனிமைப்படுத்த வசதி இல்லாதவர்கள், மருத்துவ சிகிச்சை தேவை என்போர் அங்கு சிகிச்சையில் உள்ளனர்.

அதுபோல, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி, பவானி அரசு மருத்துவமனைகளில், தலா, 100 படுக்கை ஆக்சிஜன் வசதியுடன் தரம் உயர்கிறது. இருப்பினும், அங்கு குறிப்பிட்ட படுக்கைகளில் மட்டும் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்படுவர். மற்ற படுக்கைள், பிற கட்டடங்கள், பிற நோயாளிகளுக்கு முன்னுரிமையில் வழங்கி சிகிச்சை அளிக்கப்படும் என்றார்

Top