logo
வாக்கு எண்ணும் மையத்தில்  காவல்துறை வாகனத்தில் 2 பெட்டியில் கொரடு, ஸ்க்ரூட்ரைவர் இருந்ததால் பரபரப்பு.

வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறை வாகனத்தில் 2 பெட்டியில் கொரடு, ஸ்க்ரூட்ரைவர் இருந்ததால் பரபரப்பு.

18/Apr/2021 10:49:21

புதுக்கோட்டை, ஏப் :புதுக்கோட்டை மாவட்டம் வாக்கு எண்ணும் மையத்தில் சனிக்கிழமை நள்ளிரவு  காவல்துறை வாகனத்தில் 2 பெட்டியில் கொரடு ஸ்க்ரூடிரைவர் உள்ளிட்ட  சாதனங்கள் கொண்டு வரப்பட்டதைக் கண்டறிந்து  திமுக முகவர்கள் அவற்றை  கைப்பற்றி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் மற்றும் விராலிமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆகியோர் ஆட்சியரிடம்  அளித்துள்ள மனு விவரம்:.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் தேர்தலின்போது பதிவான வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி யில் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் திமுக அதிமுக உள்ளிட்ட வேட்பாளர்களின் முகவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று(சனிக்கிழமை) நள்ளிரவு காவல்துறை வாகனம் ஒன்று வாக்குப்பெட்டிகள் வைக்கும் இடம் அருகே வந்ததாம்.

இதனால் சந்தேகமடைந்த திமுக முகவர்கள் அந்த வாகனத்தை முற்றுகையிட்டு காவல்துறை யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த  வாகனத்தை திறந்து பார்த்தபோது உள்ள  இரண்டு பெட்டிகளில் கொரடு, ஸ்க்ரூட்ரைவர்  உள்ளிட்ட பழுது நீக்கும்  உபகரணங் கள்  இருந்தது தெரியவந்தது. 

இது எதற்காக என்று கேட்டபோது அவர்கள் இதற்கு உரிய விளக்கம் கூறவில்லையாம். இதனை அடுத்து திமுக முகவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு  தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்ததேர்தல் அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் மற்றும் விராலிமலை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் தலைமையில் திமுகவி னர்,  மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரியை சனிக்கிழமை நள்ளிரவில் நேரில் சந்தித்து, நடந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும் அதுகுறித்து உரிய விசார ணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனு அளித்துள்ளனர்.

இதன் பின்னர் மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் புதுக்கோட்டை மாவட்டம் வாக்கு எண்ணும் மையத்தில்நடந்து வருவது திமுகவிற்கு பல்வேறு  சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தை அணுகி  சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்றார்.

Top