logo
ஈரோடு வ. உ. சி பூங்கா மார்க்கெட் பகுதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்:கேள்விக்குறியான சமூக இடைவெளி

ஈரோடு வ. உ. சி பூங்கா மார்க்கெட் பகுதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்:கேள்விக்குறியான சமூக இடைவெளி

20/May/2021 04:58:20

ஈரோடு, மே: ஈரோடு . . சி பூங்கா மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் காய்கனிகள் வாங்க நூற்றுக்கணக்கில் திரண்டதால் சமூக இடைவெளி கேள்விக்குறியானதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த வருடம் நேதாஜி பெரிய காய்கறி மார்க்கெட் ஈரோடு  . .சி. பூங்கா பகுதியில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள். 50-க்கும் மேற்பட்ட பழக் கடைகள் செயல்பட்டு வந்தன. மற்ற இடங்களைக் காட்டிலும் இது காய்கறி விலை குறைந்த அளவில் கிடைப்பதால் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்வார்கள்.

இதனால் காய்கறி மார்க்கெட் பகுதி எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும். இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில்  பெரிய மார்க்கெட் காலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டும் சில்லரை  வியாபாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது

இதனால்  ஒரு மணி நேரத்திற்குள்ளாக  பொருள்களை வாங்குவதற்காக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  ஒரே இடத்தில் திரள்கின்றனர்அனைத்து காய்கறி கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிவதால் சமூக இடைவெளி கேள்விக் குறியாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் கூட்டம்  திரள்வதால் நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. காய்கறி வாங்க வரும் மக்கள் முக கவசம் அணிந்து வந்தாலும் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.

அதிலும் குறிப்பாக   கடந்த 2 நாள்களாக  மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது முழு ஊரடங்கு  முடியும் வரை சில்லரை வியாபாரத்துக்கு தடை விதித்து மொத்த வியாபாரத்துக்கு  மட்டும் செய்ய அனுமதிக்கலாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Top