logo
3 லட்சம் மாதிரிகளை பரிசோதித்துள்ள புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி கொரோனா ஆய்வகம்

3 லட்சம் மாதிரிகளை பரிசோதித்துள்ள புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி கொரோனா ஆய்வகம்

28/Apr/2021 05:46:52

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியிலுள்ள கொரோனா RTPCR  ஆய்வகத்தில் 3 லட்சம் மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முதல் படியான  கொவைட் 19 வைரஸைக் கண்டறியும் RTPCR ஆய்வகம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் பிரிவில் கடந்த 2020 ஏப்ரல் மாதம் ICMR ஒப்புதலுடன் தொடங்கப்பட்டது.


 ஓராண்டு காலத்தில் 3 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள், ஆய்வக நுட்புணர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், கணினி செயல்பட்டார்கள் ஆகிய அனைவரும் சுழற்சி முறையில் ஒரு குழுவாக இரவும் பகலும்  பணியாற்றி  24 மணி நேரத்திற்குள் முடிவுகளை  அறிவித்து, அதை  இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

அதற்குத் தேவையான அனைத்து வசதிகளைளும் தடையின்றி கிடைக்க மருத்துவக் கல்லூரி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. இதுவரை 3 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதனைப் பாராட்டும் வகையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

Top