logo
தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி

29/Sep/2020 04:14:02

 

தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Top