logo
ஈரோட்டில்  மூங்கில் தடுப்புகளை அமைத்து வெளியாட்களை உள்ளே வர அனுமதியில்லை என அறிவிப்பு பலகை வைத்த குடியிருப்புவாசிகள்..!

ஈரோட்டில் மூங்கில் தடுப்புகளை அமைத்து வெளியாட்களை உள்ளே வர அனுமதியில்லை என அறிவிப்பு பலகை வைத்த குடியிருப்புவாசிகள்..!

13/May/2021 05:30:55

ஈரோடு, மே: ஈரோடு பிபிஅக்ரஹாரம் பகுதியில்  மூங்கில் தடுப்புகளை அமைத்து வெளி யாட்களை உள்ளே வர அனுமதியில்ல என்ற அறிவிப்பு பலகையை குடியிருப்பு வாசிகள் வைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ஆவது  அலை வேகமெடுத்து தினசரி பாதிப்பு அதிக ரித்து கொண்டே செல்கிறது. தினசரி பாதிப்பு கிட்டத்தட்ட ஆயிரத்தை  நெருங்கி யுள்ளது. குறிப்பாக மாநகர் பகுதியில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

ஒரு தெருவில் மூன்று வீடுகளுக்கு மேல்  தொற்று ஏற்பட்டால் அந்த வீதி தடுப்புகளால்  அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிந்து வருகின்றனர். பொது இடங்களில் சமூக இடைவெளியையும் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியான பி.பி. அக்ரஹாராம்  பகுதியில் உள்ளது அய்யர்துறை வீதி. இந்த வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

 கொரோனா தொற்று காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வருவதால் இவ்வீதி மக்கள் முன் னெச்சரிக்கை  நடவடிக்கையாக தெருவின் நுழை வாய்வு பகுதியில் முங்கி தடுப்புகள் கொண்டு வீதியை அடைத்துள்ளனர். தடுப்புகளில் முக கவசம் உயிர் கவசம் சமூக இடை வெளி பின்பற்ற வேண்டும். நோய் தொற்று பரவி வரும் வேளையில் எங்கள் பகுதிக்குள்  வெளி நபர்கள் வரவேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றும் ஒரு பலகையில்  எழுதி வைத்துள்ளனர்.

இது குறித்த பகுதி மக்கள் கூறியதாவது: கொரோனா தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப் பட்டு உயிரிழந்து  வருகின்றனர். எங்கள் வீதியில் இதுவரை யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இருந்தாலும் வெளி நபர்கள் மூலம் பரவி விடக்கூடாது என்பதற்காகவும், விழிப்பு ணர்வுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் அமைத்து வீதியை அடைத்து ள்ளோம். எங்களின் இந்த தற்காப்பு  நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றனர்.

கடந்த வருடம் கொரோனா தொற்று வந்த போது அரசாங்கமே இது போன்ற தடுப்புகளை அமைத்தபோது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், தற்போது பொதுமக்களே முன்வந்து இது போன்ற தடுப்புகளை அமைத்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முன்வந் துள்ளது அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.



Top