logo
ஈரோடு மாவட்டத்தில்  நகர் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்.. மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்த பயணிகள்

ஈரோடு மாவட்டத்தில் நகர் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்.. மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்த பயணிகள்

08/May/2021 10:46:25

ஈரோடு, மே: ஈரோடு மாவட்டத்தில்  நகர் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் செய்ய தமிழக அரசு அனுமதியளித்ததற்கு பெண் பயணிகள்  மகிழ்ச்சியும் வரவேற்பும்  தெரிவித்தனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் தி.மு. பெரும்பான்மை பலத்துடன் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து தி.மு. தலைவர் மு..ஸ்டாலின் முதல் - அமைச்சராக  பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றதும்  5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இவற்றில் மிக முக்கியமானது நகர் பேருந்துகளில்  பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்வது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்தது. இது குறித்த அறிவிப்பும் ஒவ்வொரு போக்குவரத்து மண்டல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதுஅதன்படி சனிக்கிழமை  அதிகாலை முதல் ஈரோடு மாவட்டத்தில் இயக்கப்படும்  அனைத்து நகர் பேருந்துகளிலும்  பெண்கள் இலவசமாக பயணம் செய்தனர்.


 ஈரோடு பேருந்து  நிலையத்தில்  நகர் பேருந்தில் பயணம் மேற்கொள்ள வந்த பெண்களுக்கு நடத்துனர்கள்  மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் இனிப்பு  வழங்கி  வரவேற்றனர்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து பெருந்துறை, பவானி, சென்னிமலை, சித்தோடு, கவுந்தப்பாடி, மொடக்குறிச்சிசிவகிரி உள்பட  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நகர் பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மூலம்  மே.8  முதல் நகர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்இந்த அறிவிப்பை வெளியிட்ட  தமிழக முதல்வர்  மு. . ஸ்டாலினுக்கும்  பெண்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இதுகுறித்து ராஜேஸ்வரி என்ற  பயணி கூறும் போது, நான் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறேன். இதற்காக தினமும் சித்தோட்டில் இருந்து ஈரோட்டுக்கு  பேருந்தில்  பயணம் செய்து வருகிறேன். இந்நிலையில் நகர் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத்துக்கு அனுமதியளித்து  முதலமைச்சர் மு. . ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு எங்களைப் போன்ற  வேலைக்குச்செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

இதன் மூலம்  மாதம்தோறும் எனக்கு  போக்குவரத்துச் செலவு  ரூ .1200  மீதமாகிறது. இந்தப் பணத்தை குடும்பச் செலவுக்கு பயன்படுத்துவேன். ஏழை எளிய மகளிருக்கு பயன்தரும்  இந்த சலுகையை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்  கூறினார்

Top