logo
 கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பணிக்கு வராதவராக கருதப்படுவர்: வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பணிக்கு வராதவராக கருதப்படுவர்: வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு

15/Apr/2021 09:28:53

வேலூர், ஏப்:  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பணிக்கு வந்தாலும்  வராதவர்களாக(absent) கருதப்படுவார்கள் என வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

இது குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்ட செய்தி: வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

 15-04-2021 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு absent போட வேண்டுமென வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கி உள்ளார். எனவே அரசு மருத்துவமனை மற்றும் முகாம்களில் தடுப்பூசி போடும்போது தரக்கூடிய சீட்டு(slip) இருந்தால் மட்டுமே  வருகைப்பதிவு (present) செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி உள்ளார். எனவே அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சீட்டை  வட்டார கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Top