01/Feb/2023 07:54:38
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தான்
பயின்ற அரசுப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை அரசுப்பள்ளி
ஆசிரியர் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டியைச் சேர்ந்தவர்
தி.குணசேகரன். இவர் வல்லத்திராகோட்டை அரசு
மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகவும், உதவித் தலைமை ஆசிரியராகவும்
பணியாற்றி வருகிறார். இவர் அரசுப் பள்ளிகளில்
பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு
தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செயது
வருகிறார். இதற்காக பல்வேறு அமைப்புகள் சார்பில் 22
விருதுகள் வழங்கி அவரை சிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில்,
அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவரான முறையில் அந்தப்பள்ளியில்
படிக்கும் அத்தனை மாணவர்களக்கும் சுமார்
30 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை ஆசிரியர்
குணசேகரன் புதன்கிழமை வழங்கினார். மேலும், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மணி
ஒலிப்பான், ரூ.15 ஆயிரம் மதிப்பில்
மேசைகள், மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டிக்கா
க ரூ.50 ஆயிரம் என ரூ.1
லட்சம் மதிப்பிலான உதவியை குணசேகரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் எஸ்.ஆர்.வடிவேலு, கல்விக்குழுத் தலைவர் ச.சிங்காரம், பள்ளித் தலைமை ஆசிரியர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.