logo
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2.95 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள்: சுகாதார துறை தகவல்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2.95 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள்: சுகாதார துறை தகவல்

20/Dec/2020 07:51:40

ஈரோடு, டிச: ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பு 100 -ஐ கடந்தது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரமாக உயர்ந்தது. அதேசமயம் நோய் பாதிப்பில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,500 ஆக உயர்ந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு பிறகு தினசரி பாதிப்பு 50-க்கு கீழ் குறையத் தொடங்கியது.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி, மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 249 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் நோய் பாதிப்பில் இருந்து 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,781 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனாவுக்கு 326 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது: மாவட்டத்தில் கொரோனா தாக்கம் இன்னும் முழுமையாக முடியவில்லை எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசமும், பொது இடங்களில் சமூக இடைவெளி மற்றும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

மாவட்டத்தில் இப்பவும் தினமும் 2,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 95 ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.கோரோனா வால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் காரணமாக உயிரிழப்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். 


Top